நெகிழ்ச்சியாக இருந்தார் கழுகார்!
''மெரீனாவில் ஈழத் தமிழர்களுக்காக நடத்தப்பட்ட'நினை வேந்தல்’ நிகழ்ச்சிக்கு சென்று வந்தேன். ஆயிரக்கணக்கான மக்கள், குடும்பத்தோடு வந்து நின்ற காட்சி அத்தனை உருக்கம்.
இதை நடத்துவதற்குள் 'மே 17’ இயக்கத்தினர் பட்ட பாடு கொஞ்சநஞ்சம் அல்ல. 'மெழுகுவத்தி ஏற்றக் கூடாது’ என்று போலீஸார் முதலில் அனுமதி வழங்கவில்லையாம். 'தீ விபத்து ஏற்பட்டுவிடும்’ என்றார்களாம். மீறித்தான் அதை நடத்தி இருக்கிறார்கள். இப்போது அந்த இயக்கத்தின் அமைப்பாளர் திருமுருகன் உள்ளிட்டோர் மீது மூன்றுவிதமான வழக்குகள் போடப்பட்டு உள்ளன. மெழுகுவத்திகளை எரித்து, அதன் கப்புகளைக் கடற்கரையில் போட்டுச் சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதாகவும், முழக்கங்கள் எழுப்பியதாகவும், அனுமதித்த அளவுக்கு மேல் ஆட்களைத் திரட்டியது தவறு என்றும் சொல்கிறதாம் அந்த வழக்கு!
'இறந்த மக்களுக்கு, களப் பலியானவர்களுக்கு, திரளாகக் கூடி அஞ்சலி செலுத்துவது என்பது தமிழ் மக்களின் தொன்மையான நிகழ்வு மட்டும் அல்ல, பண்பாட்டு உரிமையும்கூட!’ என்று வழக்கை சந்திக்கத் தயாராக இருக்கிறார்கள், மே 17 இயக்கத்தினர்...'' என்ற கழுகார், மேலும் செய்திகளை ஆரம்பிக்கும் முன்பு கேட்டோம்.
''2ஜி விவகாரத்தில் ஏதாவது புது தகவல் உண்டா?''
''பல்வேறு கோணங்களில் விசாரணை நடப்பது தெரிந்த விஷயம்தான்! இதில் இன்னொரு கோணம், அடுத்தடுத்த நாட்களில் முக்கியத்துவம் பெறப்போகிறது. முறைகேடாக ஸ்பெக்ட்ரம் உரிமங்களைப்
பெற்ற நிறுவனங்களுக்கு, அரசு வங்கிகள் கோடிக்கணக்கான பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்துள்ளது. 'இது விதிமுறைப்படித்தான் நடந்ததா? அல்லது உள் கைகள் நடமாட்டம் மூலமாக கமிஷன் தொகைகள் ஏதாவது கை மாறி உள்ளதா?’ என்பதுதான் பூதாகாரமாகும் கேள்வி. ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற நிறுவனங்களுக்குப் பல்வேறு வங்கிகள் சுமார்
11 ஆயிரம் கோடி வரை கடன்கள் கொடுத்துள்ளன. இது தொடர்பாக முன்னணி வங்கிகளின் உயர் அதிகாரிகள் 40 பேர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். அதன் க்ளைமாக்ஸில் நிதித் துறையின் உச்சப் பிரமுகர் ஒருவர் விசாரணை வளையத்தில் வரலாம்.''
''அப்போது இந்தத் துறையின் அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம்தானே?''
''ஆமாம்! அவருக்கே தெரியாமல்கூட நிதித் துறையைச் சேர்ந்த யாராவது உத்தரவு போட்டு இருக்கலாம் அல்லவா? இந்தக் கோணத்திலும் சி.பி.ஐ. பார்க்கிறது.''
''சுப்பிரமணியன் சுவாமி சொல்வது ப.சிதம்பரத்தைத்தானே?''
''ஆமாம்! தன்னைச் சுற்றிலும் ஒரு வலை பின்னப்படுவதை ப.சிதம்பரமும் உணர்ந்துவிட்டார் போலும்! அதனால்தான், '40 வயது, 50 வயது ஆனவர்கள்தான் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும். என்னைப்போல 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தரக் கூடாது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் விலகி நிற்க வேண்டும்’ என்று சொல்ல ஆரம்பித்துள்ளார். 'நீங்கள் பிரதமராக விரும்புகிறீர்களா?’ என்று ஒருவர் கேட்க... 'நான் மிச்சம் உள்ள காலத்தை, படிப்பதில், எழுதுவதில், பயணம் செய்வதில், செலவிட விரும்புகிறேன்’ என்று ஞான நிலையை அடைந்தவர்போல அவர் பேசுவதன் பின்னணிகூட இந்தப் பீதியாக இருக்கலாம் என்கிறார்கள்.''
''அது இருக்கட்டும்! இங்கு தமிழக கவர்னரின் பதவிக் காலம் முடிந்துவிட்டதே... அவர் எப்போது போகிறாராம்?''
''சுர்ஜித் சிங் பர்னாலா பதவிக் காலம் ஜூன் 19-ம் தேதியுடன் முடிந்துவிட்டது. அவருக்குக் கால நீட்டிப்பு தந்திருக்க வேண்டும். அல்லது பார்ட்டிவைத்து அனுப்பிவிட்டு, புது கவர்னர் வந்திருக்க வேண்டும். இரண்டுமே நடக்கவில்லை. கவர்னரை மையம் வைத்து மத்திய - மாநில அரசுகள் மத்தியில் ஒரு மௌனப் புயல் வீச ஆரம்பித்துள்ளது.''
''புதுக் கதையாக இருக்கிறதே?''
''டெல்லி சென்ற ஜெயலலிதாவை, காங்கிரஸ் சார்பில் டெல்லி மாநில முதல்வர் ஷீலா தீட்சித் சந்தித்தார் அல்லவா? புதிய கவர்னர் நியமனத்துக்காக, அப்போது மூன்று பெயர்களை ஜெயலலிதா பரிந்துரை செய்தாராம். மார்க்ரெட் ஆல்வா, நவீன் சாவ்லா, ஜனார்த்தன் ரெட்டி ஆகிய மூவரில் யாராவது ஒருவரைத் தமிழக கவர்னராக நியமித்தால் நல்லது என்றாராம். இதை சோனியாவின் கவனத்துக்கு ஷீலா தீட்சித் கொண்டுசென்றதாகவும், அப்போது டெல்லி அன்னை, தமிழக அம்மாவைப்பற்றி கோப வார்த்தைகள் சிலவற்றை உமிழ்ந்ததாகவும் பேச்சு. 'ஜெயலலிதாவைப்பற்றி எனக்கு முழுமையாகத் தெரியும். அவரது டிமாண்ட்கள் அனைத்துமே கஷ்டமானதாகவே இருக்கும். அதை நிறைவேற்ற ஆரம்பித்தால், அனுமார் வால் மாதிரி நீளும்’ என்று கமென்ட் அடித்ததாம், டெல்லி மேலிடம். 'கவர்னர் நியமனம் என்பது மத்திய அரசாங்கத்தின் தனிப்பட்ட விருப்பம். அதில் யாரும் தலையிட முடியாது’ என்றதாம் டெல்லி.''
''ஓ!''
''சென்னை வந்த பி.ஜே.பி. தலைவர் சுஷ்மா சுவராஜை சந்தித்து அன்பு பாராட்டியதன் மூலமாக காங்கிரஸ் மீதான கோபத்தை ஜெயலலிதா காட்டியதன் காரணம் இதுதானாம். இதற்கு மத்தியில்...''
''சொல்லும்!''
''தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, புதுச்சேரி கவர்னர் இக்பால் சிங் ஆகிய இருவர் மீதும் பிரதமர் மன்மோகன் சிங் தனி பிரியம் வைத்துள்ளார். எனவே, பர்னாலாவை அந்த இடத்தில் இருந்து அசைப்பதும் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. 'பர்னாலா மூட்டு வலி தொடர்பான சில சிகிச்சைகளை சென்னையில் செய்து வருகிறார். அதற்காக, அவர் கூடுதலாக ஓரிரு மாதம் அவகாசம் கேட்கிறார். அநேகமாக அந்த நீட்டிப்பை மத்திய அரசு வழங்கலாம். ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் எப்படி இருக்கிறது என்பதையும் பார்ப்போம்’ என்று மத்திய அரசு நினைக்கிறது என்று டெல்லித் தகவல்கள் சொல்கின்றன. சோனியாவின் சாய்ஸ் ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ரோசய்யாவாக இருக்கிறதாம்!'' என்ற கழுகார்...
''ஜெயலலிதா டெல்லி போனபோது, தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தார். அவர் பயன்படுத்தும் 6666 பதிவு எண்கொண்ட பஜுரோ காரும் சென்னையில் இருந்து டெல்லிக்குக் கொண்டுசெல்லப்பட்டது. ஜெயலலிதா சென்னை திரும்பிய பிறகும், அவருடைய கார் மட்டும் இன்னும் டெல்லியில் தமிழ்நாடு இல்லத்திலேயே காத்திருக்கிறது. ஜெயலலிதா தங்கியிருந்த அறையிலும், அவர் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்த பொருட்களை அங்கேயே வைத்துப் பூட்டி, சாவியை மட்டும் எடுத்து வந்துவிட்டார்களாம். ஜூலை முதல் வாரத்தில், மீண்டும் டெல்லி விசிட் இருக்கலாம். அப்போது சோனியா சந்திப்பு நடக்கலாம் என்கிறார்கள்...'' என்ற பிட்டைப் போட்டுவிட்டு எஸ்கேப் ஆனார்!
படங்கள்: சு.குமரேசன், என்.விவேக்
பந்தாட்டம் ஆரம்பம்!
ஆட்சிக்கு வந்த 43-வது நாளிலேயே அமைச்சரவையில் அதிரடியாக மாற்றம் செய்து இருக்கிறார்,
முதல்வர் ஜெயலலிதா. மரியம் பிச்சை மரணத்துக்குப் பிறகு அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லை என்பதால் ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. முகம்மது ஜானை அமைச்சர் ஆக்கியிருக்கிறார். அதோடு துறை மாற்றமும் நடந்திருக்கிறது.
கடந்த ஆட்சியில் ஸ்டாலின் பொறுப்பு வகித்த தொழில்துறை சண்முகவேலுவுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. கனிம வளம் என்ற கரன்சி கொட்டும் துறையும் இவரிடம்தான் இருந்தது. சண்முகவேலு இப்போது ஊரக தொழில் துறை ஒதுக்கி டம்மி ஆக்கப்பட்டு இருக்கிறார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் சிறப்புத் திட்ட செயலகத்துறை அமைச்சராக இருந்த வேலுமணி தொழில்துறை அமைச்சராகிவிட்டார். சில நாட்களுக்கு முன்பு, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதேசமயம் கோவையில் இருந்து வியாபாரி ஒருவர் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதம் பரபரப்பை கிளப்பியது. ஜூ.வி-யில் அந்த கடிதமும் வெளிவந்தது. இந்த சூழ்நிலையில்தான் வேலுமணியின் துறை மாற்றப்பட்டு உள்ளது. ''திட்ட அமலாக்கத் துறை சாதாரணமானது, அதற்குப் பதிலாக வேலுமணிக்கு தொழில்துறை கொடுத்துள்ளார்கள் அதனால் இது டம்மி போஸ்ட் இல்லை'' என்று அவருடைய ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.
கருப்பசாமியிடம் இருந்த கால்நடைத் துறை சிவபதியிடம் அளிக்கப்பட்டுள்ளது. அவரிடம் இருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை கருப்பசாமிக்கு தரப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஆதிதிராவிடர் நலத் துறை என்று கொஞ்சம் வெயிட்டான போஸ்டில் இருந்தவர். இப்போது கால்நடையையும் பறிகொடுத்து விளையாட்டில் ஒதுக்கப்பட்டு இருக்கிறார்.
ஊரக தொழில் துறை அமைச்சராக இருந்த எம்.சி.சம்பத்திடம் திட்ட அமலாக்கத் துறை வழங்கி, அவரை ஓரம் கட்டி இருக்கிறார்கள். ''இரண்டு அமைச்சர்களின் அடிப்பொடிகள் பசையான வசூலில் இறங்கியதுதான் இந்த மாற்றங்களுக்கு காரணம்!'' என்கிறார்கள் கோட்டையில்.
''மெரீனாவில் ஈழத் தமிழர்களுக்காக நடத்தப்பட்ட'நினை வேந்தல்’ நிகழ்ச்சிக்கு சென்று வந்தேன். ஆயிரக்கணக்கான மக்கள், குடும்பத்தோடு வந்து நின்ற காட்சி அத்தனை உருக்கம்.
இதை நடத்துவதற்குள் 'மே 17’ இயக்கத்தினர் பட்ட பாடு கொஞ்சநஞ்சம் அல்ல. 'மெழுகுவத்தி ஏற்றக் கூடாது’ என்று போலீஸார் முதலில் அனுமதி வழங்கவில்லையாம். 'தீ விபத்து ஏற்பட்டுவிடும்’ என்றார்களாம். மீறித்தான் அதை நடத்தி இருக்கிறார்கள். இப்போது அந்த இயக்கத்தின் அமைப்பாளர் திருமுருகன் உள்ளிட்டோர் மீது மூன்றுவிதமான வழக்குகள் போடப்பட்டு உள்ளன. மெழுகுவத்திகளை எரித்து, அதன் கப்புகளைக் கடற்கரையில் போட்டுச் சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதாகவும், முழக்கங்கள் எழுப்பியதாகவும், அனுமதித்த அளவுக்கு மேல் ஆட்களைத் திரட்டியது தவறு என்றும் சொல்கிறதாம் அந்த வழக்கு!
''2ஜி விவகாரத்தில் ஏதாவது புது தகவல் உண்டா?''
''பல்வேறு கோணங்களில் விசாரணை நடப்பது தெரிந்த விஷயம்தான்! இதில் இன்னொரு கோணம், அடுத்தடுத்த நாட்களில் முக்கியத்துவம் பெறப்போகிறது. முறைகேடாக ஸ்பெக்ட்ரம் உரிமங்களைப்
''அப்போது இந்தத் துறையின் அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம்தானே?''
''ஆமாம்! அவருக்கே தெரியாமல்கூட நிதித் துறையைச் சேர்ந்த யாராவது உத்தரவு போட்டு இருக்கலாம் அல்லவா? இந்தக் கோணத்திலும் சி.பி.ஐ. பார்க்கிறது.''
''சுப்பிரமணியன் சுவாமி சொல்வது ப.சிதம்பரத்தைத்தானே?''
''ஆமாம்! தன்னைச் சுற்றிலும் ஒரு வலை பின்னப்படுவதை ப.சிதம்பரமும் உணர்ந்துவிட்டார் போலும்! அதனால்தான், '40 வயது, 50 வயது ஆனவர்கள்தான் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும். என்னைப்போல 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தரக் கூடாது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் விலகி நிற்க வேண்டும்’ என்று சொல்ல ஆரம்பித்துள்ளார். 'நீங்கள் பிரதமராக விரும்புகிறீர்களா?’ என்று ஒருவர் கேட்க... 'நான் மிச்சம் உள்ள காலத்தை, படிப்பதில், எழுதுவதில், பயணம் செய்வதில், செலவிட விரும்புகிறேன்’ என்று ஞான நிலையை அடைந்தவர்போல அவர் பேசுவதன் பின்னணிகூட இந்தப் பீதியாக இருக்கலாம் என்கிறார்கள்.''
''அது இருக்கட்டும்! இங்கு தமிழக கவர்னரின் பதவிக் காலம் முடிந்துவிட்டதே... அவர் எப்போது போகிறாராம்?''
''சுர்ஜித் சிங் பர்னாலா பதவிக் காலம் ஜூன் 19-ம் தேதியுடன் முடிந்துவிட்டது. அவருக்குக் கால நீட்டிப்பு தந்திருக்க வேண்டும். அல்லது பார்ட்டிவைத்து அனுப்பிவிட்டு, புது கவர்னர் வந்திருக்க வேண்டும். இரண்டுமே நடக்கவில்லை. கவர்னரை மையம் வைத்து மத்திய - மாநில அரசுகள் மத்தியில் ஒரு மௌனப் புயல் வீச ஆரம்பித்துள்ளது.''
''டெல்லி சென்ற ஜெயலலிதாவை, காங்கிரஸ் சார்பில் டெல்லி மாநில முதல்வர் ஷீலா தீட்சித் சந்தித்தார் அல்லவா? புதிய கவர்னர் நியமனத்துக்காக, அப்போது மூன்று பெயர்களை ஜெயலலிதா பரிந்துரை செய்தாராம். மார்க்ரெட் ஆல்வா, நவீன் சாவ்லா, ஜனார்த்தன் ரெட்டி ஆகிய மூவரில் யாராவது ஒருவரைத் தமிழக கவர்னராக நியமித்தால் நல்லது என்றாராம். இதை சோனியாவின் கவனத்துக்கு ஷீலா தீட்சித் கொண்டுசென்றதாகவும், அப்போது டெல்லி அன்னை, தமிழக அம்மாவைப்பற்றி கோப வார்த்தைகள் சிலவற்றை உமிழ்ந்ததாகவும் பேச்சு. 'ஜெயலலிதாவைப்பற்றி எனக்கு முழுமையாகத் தெரியும். அவரது டிமாண்ட்கள் அனைத்துமே கஷ்டமானதாகவே இருக்கும். அதை நிறைவேற்ற ஆரம்பித்தால், அனுமார் வால் மாதிரி நீளும்’ என்று கமென்ட் அடித்ததாம், டெல்லி மேலிடம். 'கவர்னர் நியமனம் என்பது மத்திய அரசாங்கத்தின் தனிப்பட்ட விருப்பம். அதில் யாரும் தலையிட முடியாது’ என்றதாம் டெல்லி.''
''ஓ!''
''சென்னை வந்த பி.ஜே.பி. தலைவர் சுஷ்மா சுவராஜை சந்தித்து அன்பு பாராட்டியதன் மூலமாக காங்கிரஸ் மீதான கோபத்தை ஜெயலலிதா காட்டியதன் காரணம் இதுதானாம். இதற்கு மத்தியில்...''
''சொல்லும்!''
''தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, புதுச்சேரி கவர்னர் இக்பால் சிங் ஆகிய இருவர் மீதும் பிரதமர் மன்மோகன் சிங் தனி பிரியம் வைத்துள்ளார். எனவே, பர்னாலாவை அந்த இடத்தில் இருந்து அசைப்பதும் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. 'பர்னாலா மூட்டு வலி தொடர்பான சில சிகிச்சைகளை சென்னையில் செய்து வருகிறார். அதற்காக, அவர் கூடுதலாக ஓரிரு மாதம் அவகாசம் கேட்கிறார். அநேகமாக அந்த நீட்டிப்பை மத்திய அரசு வழங்கலாம். ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் எப்படி இருக்கிறது என்பதையும் பார்ப்போம்’ என்று மத்திய அரசு நினைக்கிறது என்று டெல்லித் தகவல்கள் சொல்கின்றன. சோனியாவின் சாய்ஸ் ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ரோசய்யாவாக இருக்கிறதாம்!'' என்ற கழுகார்...
''ஜெயலலிதா டெல்லி போனபோது, தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தார். அவர் பயன்படுத்தும் 6666 பதிவு எண்கொண்ட பஜுரோ காரும் சென்னையில் இருந்து டெல்லிக்குக் கொண்டுசெல்லப்பட்டது. ஜெயலலிதா சென்னை திரும்பிய பிறகும், அவருடைய கார் மட்டும் இன்னும் டெல்லியில் தமிழ்நாடு இல்லத்திலேயே காத்திருக்கிறது. ஜெயலலிதா தங்கியிருந்த அறையிலும், அவர் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்த பொருட்களை அங்கேயே வைத்துப் பூட்டி, சாவியை மட்டும் எடுத்து வந்துவிட்டார்களாம். ஜூலை முதல் வாரத்தில், மீண்டும் டெல்லி விசிட் இருக்கலாம். அப்போது சோனியா சந்திப்பு நடக்கலாம் என்கிறார்கள்...'' என்ற பிட்டைப் போட்டுவிட்டு எஸ்கேப் ஆனார்!
படங்கள்: சு.குமரேசன், என்.விவேக்
பந்தாட்டம் ஆரம்பம்!
ஆட்சிக்கு வந்த 43-வது நாளிலேயே அமைச்சரவையில் அதிரடியாக மாற்றம் செய்து இருக்கிறார்,
கடந்த ஆட்சியில் ஸ்டாலின் பொறுப்பு வகித்த தொழில்துறை சண்முகவேலுவுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. கனிம வளம் என்ற கரன்சி கொட்டும் துறையும் இவரிடம்தான் இருந்தது. சண்முகவேலு இப்போது ஊரக தொழில் துறை ஒதுக்கி டம்மி ஆக்கப்பட்டு இருக்கிறார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் சிறப்புத் திட்ட செயலகத்துறை அமைச்சராக இருந்த வேலுமணி தொழில்துறை அமைச்சராகிவிட்டார். சில நாட்களுக்கு முன்பு, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதேசமயம் கோவையில் இருந்து வியாபாரி ஒருவர் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதம் பரபரப்பை கிளப்பியது. ஜூ.வி-யில் அந்த கடிதமும் வெளிவந்தது. இந்த சூழ்நிலையில்தான் வேலுமணியின் துறை மாற்றப்பட்டு உள்ளது. ''திட்ட அமலாக்கத் துறை சாதாரணமானது, அதற்குப் பதிலாக வேலுமணிக்கு தொழில்துறை கொடுத்துள்ளார்கள் அதனால் இது டம்மி போஸ்ட் இல்லை'' என்று அவருடைய ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.
கருப்பசாமியிடம் இருந்த கால்நடைத் துறை சிவபதியிடம் அளிக்கப்பட்டுள்ளது. அவரிடம் இருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை கருப்பசாமிக்கு தரப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஆதிதிராவிடர் நலத் துறை என்று கொஞ்சம் வெயிட்டான போஸ்டில் இருந்தவர். இப்போது கால்நடையையும் பறிகொடுத்து விளையாட்டில் ஒதுக்கப்பட்டு இருக்கிறார்.
ஊரக தொழில் துறை அமைச்சராக இருந்த எம்.சி.சம்பத்திடம் திட்ட அமலாக்கத் துறை வழங்கி, அவரை ஓரம் கட்டி இருக்கிறார்கள். ''இரண்டு அமைச்சர்களின் அடிப்பொடிகள் பசையான வசூலில் இறங்கியதுதான் இந்த மாற்றங்களுக்கு காரணம்!'' என்கிறார்கள் கோட்டையில்.
No comments:
Post a Comment