பாபா அறக்கட்டளையில் தகிடுதத்தங்கள்!''
'நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். வெளி உலக வாழ்வில் எத்தனையோ சூழ்நிலைகள் நம்மைப் பாதிக்கின்றன. அந்தச் சூழ்நிலைகள் நம்மைத் தாக்காதபடி, நம்பிக்கையே கவசம்போல பாதுகாக்கும். சோதனைகளையும், விரும்பி ஏற்கும் பக்குவத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்’ - தன் பக்தர்களுக்கு ஸ்ரீசத்ய சாயிபாபா அடிக்கடி சொல்லி வந்த அருள்வாக்கு இது. அவரது மறைவுக்குப் பிறகு ஆசிரமத்துக்கு வந்திருக்கும் சோதனைகளை, யாருடைய நம்பிக்கை காப்பாற்றும் என்பதுதான் இப்போதையை கேள்வி.
புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் சாயிபாபா தங்கி இருந்த யஜுர் மந்திர் அறையில் கோடிக்கணக்கில் பணமும், கிலோ கணக்கில் தங்கமும், வெள்ளியும் எடுக்கப்பட்டு பரபரப்பு கிளம்பியது. அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள், கூடுதலாக அதிர்ச்சி அளிக்கின்றன!
ஸ்ரீசத்ய சாயி அறக்கட்டளைக்கு சொந்தமான காரை சோதனைச் சாவடியில் பெங்களூரு போலீஸார்
சோதனை நடத்தியபோது, மூட்டை மூட்டையாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் பயணம் செய்த அறக்கட்டளை உறுப்பினரின் கார் டிரைவர் மற்றும் பாபாவின் சமாதியை வடிவமைக்கும் இன்ஜினீயர்கள் ஹரீஷ் நந்தா ஷெட்டி, சுகான் ஷெட்டி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, பணம் முழுக்க பிரசாந்தி நிலையத்தில் அறை எண் 6-ல் இருந்துகொண்டு வரப்பட்டதாக தகவல் சொல்லி இருக்கிறார்கள். அந்த அறையில் தங்கி இருந்தது, பாபாவின் சொந்த சகோதரர் மகனும், அறக்கட்டளையின் தலைவருமான ஆர்.ஜே.ரத்னாகர்.
இதைத் தொடர்ந்து பாபா அறக்கட்டளைக்குச் சொந்தமான
ஆம்னி பஸ் ஒன்றையும் போலீஸார் சோதனையிட, அதிலும்
10 கோடி பணம் சிக்கியது.
புட்டபர்த்தியில் கடை வைத்திருக்கும் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரிடம் பேசினோம். ''பாபாவோட மறைவுக்குப் பிறகு ஆசிரமத்தில் நடக்கும் எல்லா விஷயங்களும் மர்மமா இருக்கு. அதேபோல, இங்கே வரும் பக்தர்களின் கூட்டமும் இப்போது சுத்தமா நின்னுடுச்சு. தெருக்கள் வெறிச்சோடிக்கிடக்குது. கடையில் ஒரு நாளைக்கு
100-க்குக்கூட வியாபரம் இல்லை. கடையை மூடிட்டு வேற ஊருக்கு கிளம்பலாம்னு முடிவுக்கு வந்திருக்கோம்...'' என்றவர், ''பாபா இறந்த நாளில் இருந்தே ஆசிரமத்தில் இருந்து ஏகப்பட்ட லாரிகளும், பஸ்களும் வெளியில் போயிட்டே இருந்தன. அவற்றில் பணம்தான் கடத்தி இருப்பாங்கன்னு எங்களுக்கு சந்தேகமா இருக்கு.
வெளி ஆட்கள் யாரும் ஆசிரமத்துக்குள் நுழைஞ்சு ஒரு துரும்பைக்கூட எடுத்துக்கிட்டுப் போக முடியாது. எல்லாமே உள்ளே இருக்கும் சில ஆட்களோட துணையோடுதான் நடந்துட்டு இருக்கு. திருப்பதிபோலவே பிரசாந்தி நிலையத்தையும் ஒரு தேவஸ்தான அமைப்பின் கீழ் கொண்டுவர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என்று கோரிக்கை வைத்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஆர்.ஜே.ரத்னாகர், ''காரிலும் பஸ்ஸிலும் கொண்டுபோன பணம் பக்தர்களுடையது. அதற்கும், ஆசிரமத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பறிமுதல் செய்யப்பட்ட பணம் நீதிமன்றத்தில் இருக்கிறது. அதைப்பற்றி விசாரணை நடக்கிறது. ஆசிரம உறுப்பினர்கள் இங்கு இருந்து கோடிக்கணக்கில் பணத்தைக் கடத்துவதைப்போல சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். அதில் துளிகூட உண்மை இல்லை. நாங்கள் அனைவருமே பாபாவுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்!'' என்கிறார் உருக்கமாக.
அமெரிக்க கோடீஸ்வரர் என்று அடையாளம் காட்டப்பட்ட பாபாவின் தீவிர பக்தரான ஐசக் டிக்ரீட்
என்பவர், ''பாபா அறக்கட்டளையில் நடக்கும் தகிடுதத்தங்கள் பற்றிய திடுக்கிடும் உண்மைகள் அத்தனையும் ஆதாரத்தோடு என் கையில் இருக்கின்றன. ஜூலை 15-ம் தேதி குரு பூர்ணிமா அன்று மீடியாக்கள் முன்னிலையில் அத்தனையும் பகிரங்கப்படுத்துவேன். அப்போது பலரது முகத் திரைகள் கிழியும்!'' என்று மிரட்டி இருக்கிறார்.
ஆந்திர அரசியல் தலைவர்களின் பார்வையும் பாபா ஆசிரமத்தின் மீது ஆழப் பதிந்திருக்கிறது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆசிரமத்துக்கு திடீரென சென்று, ரத்னாகருடன் பேசி, தனது ஆதரவுக் கரத்தை நீட்டிவிட்டு வந்தார். தெலுங்கு தேசம் கட்சியோ, 'பாபாவின் ஆசிரமத்தை அரசாங்கம் கைப்பற்ற வேண்டும். சொத்துகள் பற்றி விசாரணை நடத்த தனி விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்!’ என கோரிக்கை வைத்திருக்கிறது.
ஆந்திர முதல்வர் கிரண்குமார், தலைமைச் செயலாளர் மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தி இருக்கிறார். சாயி பாபா ஆசிரமத்துக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 16 முக்கிய சலுகைகளை உடனடியாக ரத்து செய்ய ஆந்திர அரசு முடிவு எடுத்திருக்கிறதாம்.
'வாழும் காலத்திலேயே வாயில் இருந்து லிங்கம்... கையில் இருந்து விபூதி...’ என சர்ச்சைகளையும் புகழையும் மாறி மாறி அடைந்தவர் சாயி பாபா. அவர் இறந்த பிறகும் தொடரும் சர்ச்சைகள் எப்போது முடிவுக்கு வரும் என்பதற்குத்தான் விடை தெரியவில்லை!
- கே.ராஜாதிருவேங்கடம்
ஜூலை 15-ல் மர்மம் அவிழ்ப்பாரா ஐசக் டிக்ரீட்?
புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் சாயிபாபா தங்கி இருந்த யஜுர் மந்திர் அறையில் கோடிக்கணக்கில் பணமும், கிலோ கணக்கில் தங்கமும், வெள்ளியும் எடுக்கப்பட்டு பரபரப்பு கிளம்பியது. அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள், கூடுதலாக அதிர்ச்சி அளிக்கின்றன!
ஸ்ரீசத்ய சாயி அறக்கட்டளைக்கு சொந்தமான காரை சோதனைச் சாவடியில் பெங்களூரு போலீஸார்
இதைத் தொடர்ந்து பாபா அறக்கட்டளைக்குச் சொந்தமான
புட்டபர்த்தியில் கடை வைத்திருக்கும் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரிடம் பேசினோம். ''பாபாவோட மறைவுக்குப் பிறகு ஆசிரமத்தில் நடக்கும் எல்லா விஷயங்களும் மர்மமா இருக்கு. அதேபோல, இங்கே வரும் பக்தர்களின் கூட்டமும் இப்போது சுத்தமா நின்னுடுச்சு. தெருக்கள் வெறிச்சோடிக்கிடக்குது. கடையில் ஒரு நாளைக்கு
வெளி ஆட்கள் யாரும் ஆசிரமத்துக்குள் நுழைஞ்சு ஒரு துரும்பைக்கூட எடுத்துக்கிட்டுப் போக முடியாது. எல்லாமே உள்ளே இருக்கும் சில ஆட்களோட துணையோடுதான் நடந்துட்டு இருக்கு. திருப்பதிபோலவே பிரசாந்தி நிலையத்தையும் ஒரு தேவஸ்தான அமைப்பின் கீழ் கொண்டுவர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என்று கோரிக்கை வைத்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஆர்.ஜே.ரத்னாகர், ''காரிலும் பஸ்ஸிலும் கொண்டுபோன பணம் பக்தர்களுடையது. அதற்கும், ஆசிரமத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பறிமுதல் செய்யப்பட்ட பணம் நீதிமன்றத்தில் இருக்கிறது. அதைப்பற்றி விசாரணை நடக்கிறது. ஆசிரம உறுப்பினர்கள் இங்கு இருந்து கோடிக்கணக்கில் பணத்தைக் கடத்துவதைப்போல சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். அதில் துளிகூட உண்மை இல்லை. நாங்கள் அனைவருமே பாபாவுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்!'' என்கிறார் உருக்கமாக.
அமெரிக்க கோடீஸ்வரர் என்று அடையாளம் காட்டப்பட்ட பாபாவின் தீவிர பக்தரான ஐசக் டிக்ரீட்
ஆந்திர அரசியல் தலைவர்களின் பார்வையும் பாபா ஆசிரமத்தின் மீது ஆழப் பதிந்திருக்கிறது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆசிரமத்துக்கு திடீரென சென்று, ரத்னாகருடன் பேசி, தனது ஆதரவுக் கரத்தை நீட்டிவிட்டு வந்தார். தெலுங்கு தேசம் கட்சியோ, 'பாபாவின் ஆசிரமத்தை அரசாங்கம் கைப்பற்ற வேண்டும். சொத்துகள் பற்றி விசாரணை நடத்த தனி விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்!’ என கோரிக்கை வைத்திருக்கிறது.
ஆந்திர முதல்வர் கிரண்குமார், தலைமைச் செயலாளர் மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தி இருக்கிறார். சாயி பாபா ஆசிரமத்துக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 16 முக்கிய சலுகைகளை உடனடியாக ரத்து செய்ய ஆந்திர அரசு முடிவு எடுத்திருக்கிறதாம்.
'வாழும் காலத்திலேயே வாயில் இருந்து லிங்கம்... கையில் இருந்து விபூதி...’ என சர்ச்சைகளையும் புகழையும் மாறி மாறி அடைந்தவர் சாயி பாபா. அவர் இறந்த பிறகும் தொடரும் சர்ச்சைகள் எப்போது முடிவுக்கு வரும் என்பதற்குத்தான் விடை தெரியவில்லை!
- கே.ராஜாதிருவேங்கடம்
No comments:
Post a Comment