விஜயகாந்த் வீட்டுக் கடைக்குட்டி சண்முகபாண்டியன் கேமராவுக்கு முகம் காட்டப் போகிறார். மாமா எல்.கே.சுதீஷ் தயாரிக்கும் படத்தில் சண்முகம் ஹீரோ. இவருக்கென்று புதுசாக ஒரு கதையை உருவாக்கி இயக்குகிறார் பூபதி பாண்டியன்!
நரேன் நாயகனாக நடித்த 'அஞ்சாதே’ படத்தில் பிரசன்னாவுக்கு வில்லன் வேஷம் கொடுத்தார் மிஷ்கின். இப்போது ஜீவா ஹீரோவாக நடிக்கும் படத்தின் பிரதான வில்லன் ரோலுக்கு நரேனைத் தேர்வு செய்து இருக்கிறார்!
முன்னணி நடிகர்கள் வயிற்றில் டன் கணக்கில் புளி கரைக்கிறார் சூர்யா. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'மாற்றான்’ படத்துக்கு பூஜையே இன்னும் போடவில்லை. அதற்குள்
63 கோடிக்கு விலை பேசும் அளவுக்குப் பரபரப்பான வியாபாரமாம்!
எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது கோதண்டபாணி ரெக்கார்டிங் தியேட்டரை விலைபேசுவதாகச் சொன்னது, நடந்தேவிட்டது. 99 வருட அக்ரிமென்ட் அடிப்படையில் ஜெமினி லேப் நிறுவனத்திடம் விற்றுவிட்டார்!
தி.மு.க-வில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்ட பாக்யராஜுக்கு இப்போது ரொம்ப மன வருத்தமாம். ''குஷ்பு, வடிவேலுவுக்குக் கொடுக்கிற மரியாதையைக்கூட எனக்குத் தருவது இல்லையே...'' என்று நெருக்கமான புள்ளிகளிடம் உருக்கமாகப் புலம்புகிறாராம்!


ஒளிமயமான நடிகர் தயாரிக்கும் படங்களில் தவறாமல் இடம்பெறும் மூத்த நகைச்சுவை எஸ்.எம்.எஸ் நடிகர் ஒருவர், ''அவரோட எல்லா படத்துலேயும் நடிச்சா மட்டும் போதுமா? சம்பளம்னுஒண்ணு இருக்கே... அதைத் தர வேணாமா?'' என்று சக நடிகர்களிடம் வேதனையில் புலம்புகிறாராம்!

கிராமத்து இயக்குநர், தலைவர் பதவியை தூக்கி எறிய நினைத்தாராம். ''உங்களுக்காக அலைஞ்ச எங்க உழைப்பை மதிக்க மாட்டீங்களா?'' என்று ஆதரவாளர்களிடம் இருந்து கோரஸாக குரல் கேட்கவே, கண் கலங்கி முடிவை வாபஸ் பெற்றாராம்!

காக்கியின் உதவியை நாடியுள்ள செல்வ நடி¬கக்கு, அவர் கேட்காமலே கதர்கள் ஆதரவை வாரி வழங்குகிறார்களாம். கடுப்பில் இருக்கின்றனர் கறுப்புச் சட்டைகள்!
No comments:
Post a Comment