தன்னை வெற்றி அடையச் செய்த ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்கு நன்றி சொல்வதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா மூன்று நாட்களும், ம.தி.மு.க. வழக்கறிஞர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வைகோ இரண்டு நாட்களும் திருச்சியில் தங்க... நகரமே திமிலோகப்பட்டது.
ஜூன் 19 முதல் 21 வரையில் ஜெயலலிதா சங்கம் ஹோட்டலில் தங்கினார். 'ஆடம்பர வரவேற்புகள் கூடாது’ என்று முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப் பட்டதால், பிரமாண்ட கட்-அவுட்கள், ஃப்ளெக்ஸ் பேனர்கள் எதுவும் கண்ணில்படவில்லை. முதல்வர் வருகையை முன்னிட்டு சாலைகள் மணப் பெண்ணைப்போல் ஜொலிக்க... அதற்கு அழகு கூட்டுவதுபோல், கட்சிக் கொடிகள் இரு
புறமும் காற்றில் படபடத்தன. திரும்பும் திசை எல்லாம் பாதுகாப்புக்கு போலீஸார் குவிக்கப்பட, ஆங்காங்கே கட்சிக்காரர்கள் 'அம்மா’ தரிசனத்துக்காக காத்துக் கிடந்தனர்.
முதல் நாள் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்று அரங்கனை தரிசித்த ஜெய லலிதா, அன்று மாலை அரசு விழாவில் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட பகுதி களுக்கு,
190 கோடிகள் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, மக்களை மலைக்க வைத்தார். அடுத்த இரண்டு நாட்களும் கிராமம் கிராமமாகச் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித் தார். முதியவர்கள் நின்றால், வாகனத்தை நிறுத்தி அவர்கள் கொடுக்கும் மனுக்களை முதல்வர் பெற்றுக்கொண்டார். பேசத் திட்டமிடாத இடங்களிலும் மக்கள் கூட்டமாக நின்றால், வாக னத்தை நிறுத்திப் பேசினார்.
முதல்வரின் கொண்டாட்டக் களேபரம் முடிய... ஜூன் 25-ம் தேதி, ம.தி.மு.க. வழக்கறிஞர்கள் மாநாட்டுக்காக தயாராகத் தொடங்கியது திருச்சி. அ.தி.மு.க-வினர் விட்டுவைத்து இருந்த மிச்சம் மீதி இடங் களில் ம.தி.மு.க-வினர் தங்கள் கட்சிக் கொடிகளைக் கட்டி வைத்தனர். முந்தைய தினமே பல்வேறு ஊர்களில் இருந்து வந்த வழக்கறிஞர்கள், நகரின் வீதிகளில் உலா வரத் துவங்கினர்.
ஒரு நாள் முன்னதாக வந்து விட்ட வைகோவும், திருச்சியின் பல்வேறு இடங்களில், கட்சியின் 18-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சி கொடி ஏற்றி, பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங் கினார். லால்குடி ஒன்றியச் செயலாளர் மைக்கேல் ராஜ் மகள் மேரி ராஜ ஷீலாவுக்கு 26-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருமணம். எனவே, மணமக் களை முன்கூட்டியே வாழ்த்திச் சென்றார். அடுத்த நாள் வழக் கறிஞர்கள் மாநாட்டில் காலை முதல் இரவு வரை கலந்து கொண்டு இரவு திருச்சியில் இருந்து கிளம்பினார்.
இந்த நேரத்தில், 'கட்சிப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க ஒரு நாள் பயணமாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வருகிறார்’ என்று அறிவிக்கப் படவே, 'இரண்டு கழகங்களையும் மிஞ்சும் வகையில் திருச்சியை திக்கு முக்காட வைக்கிறோம்’ என்று சவால்விட்டனர் தி.மு.க. தொண்டர்கள். ஆனால் ஸ்டாலின் வருகை திடீரென ரத்தாகவே, அவர்கள் சோக மாகிப் போனது தனி டிராக்!
ஜூன் 19 முதல் 21 வரையில் ஜெயலலிதா சங்கம் ஹோட்டலில் தங்கினார். 'ஆடம்பர வரவேற்புகள் கூடாது’ என்று முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப் பட்டதால், பிரமாண்ட கட்-அவுட்கள், ஃப்ளெக்ஸ் பேனர்கள் எதுவும் கண்ணில்படவில்லை. முதல்வர் வருகையை முன்னிட்டு சாலைகள் மணப் பெண்ணைப்போல் ஜொலிக்க... அதற்கு அழகு கூட்டுவதுபோல், கட்சிக் கொடிகள் இரு
முதல் நாள் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்று அரங்கனை தரிசித்த ஜெய லலிதா, அன்று மாலை அரசு விழாவில் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட பகுதி களுக்கு,
முதல்வரின் கொண்டாட்டக் களேபரம் முடிய... ஜூன் 25-ம் தேதி, ம.தி.மு.க. வழக்கறிஞர்கள் மாநாட்டுக்காக தயாராகத் தொடங்கியது திருச்சி. அ.தி.மு.க-வினர் விட்டுவைத்து இருந்த மிச்சம் மீதி இடங் களில் ம.தி.மு.க-வினர் தங்கள் கட்சிக் கொடிகளைக் கட்டி வைத்தனர். முந்தைய தினமே பல்வேறு ஊர்களில் இருந்து வந்த வழக்கறிஞர்கள், நகரின் வீதிகளில் உலா வரத் துவங்கினர்.
ஒரு நாள் முன்னதாக வந்து விட்ட வைகோவும், திருச்சியின் பல்வேறு இடங்களில், கட்சியின் 18-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சி கொடி ஏற்றி, பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங் கினார். லால்குடி ஒன்றியச் செயலாளர் மைக்கேல் ராஜ் மகள் மேரி ராஜ ஷீலாவுக்கு 26-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருமணம். எனவே, மணமக் களை முன்கூட்டியே வாழ்த்திச் சென்றார். அடுத்த நாள் வழக் கறிஞர்கள் மாநாட்டில் காலை முதல் இரவு வரை கலந்து கொண்டு இரவு திருச்சியில் இருந்து கிளம்பினார்.
இந்த நேரத்தில், 'கட்சிப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க ஒரு நாள் பயணமாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வருகிறார்’ என்று அறிவிக்கப் படவே, 'இரண்டு கழகங்களையும் மிஞ்சும் வகையில் திருச்சியை திக்கு முக்காட வைக்கிறோம்’ என்று சவால்விட்டனர் தி.மு.க. தொண்டர்கள். ஆனால் ஸ்டாலின் வருகை திடீரென ரத்தாகவே, அவர்கள் சோக மாகிப் போனது தனி டிராக்!
No comments:
Post a Comment