அரசியல் காழ்ப்பு உணர்வு தமிழகத்தில்தான் அதிகமா?
நல்லா இருந்த தமிழ்நாடுதான் இது!

அரசியலில் எதிரெதிர் துருவமாக இருந்த பெரியாரும் ராஜாஜியும் கடைசி வரை நல்ல நட்புடன் சிரித்துப் பேசிக்கொண்டுதான் இருந்தார்கள். காங்கிரஸுக்கு எதிராகக் கச்சை கட்டி நின்ற அண்ணா, குடியாத்தம் இடைத் தேர்தலில் காமராஜருக்கு எதிராக வேட்பாளரைக்கூட நிறுத்தாமல் கண்ணியம் காத்தார். சட்டசபையில் முதல்வர் பக்தவத்சலத்தைக் கேள்விகளால் துளைத்த கருணாநிதி, அவரைத் தனது தொகுதிக்கு அழைத்துச் சென்று விழாக்கள் நடத்தினார். எந்தப் பெரியாரை எதிர்த்துக் கட்சி தொடங்கினாரோ, அவரைத்தான், தான் தேர்தலில் வென்றதும் சந்தித்தார் அண்ணா. இவ்வளவு ஏன், தன்னைச் சுட்டதாக கைதாகி சிறையில் இருந்து வெளியே வந்த எம்.ஆர்.ராதாவுடன் எம்.ஜி.ஆர். சிரித்துப் பேசிய புகைப்படங்கள்கூட உண்டு.
ஆனால், இந்தக் காட்சிகள் அனைத்தும் கருணாநிதி - எம்.ஜி.ஆர். பிரிவுக்குப் பிறகுதான், பங்காளி மோதலாக மாறியது. இன்று பகையாளிச் சண்டையாக நிற்கிறது.
அரசியல் என்பது, சேவையாக இருந்தால் அது போட்டியாக மட்டும் முடிந்திருக்கும். சம்பாத்தியமாக மாறியதால், பொறாமையாக வெடித்துவிட்டது!
மா.சுந்தரமூர்த்தி, செய்யாறு.
அரசியல்வாதிகளுக்கு ஏன் கல்வித் தகுதி வைப்பது இல்லை?
அதிலும் ஃபோர்ஜரிதான் நிகழும். அப்புறம் எதற்கு அந்தத் தகுதி? வட இந்தியப் பல்கலைக்கழகங்கள் இது போன்ற எத்தனையோ பட்டங்களை வாரி வாரி வழங்கி வருகின்றன. அதை வாங்கிக்கொண்டு, வழக்கறிஞர்களாக, டாக்டர்களாக வலம் வருவார்கள்.
எல்லா விதிகளுக்கும் விதிவிலக்கு உண்டு என்பதுதானே இந்தியாவின் எழுதப்படாத விதி!
இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி
லோக்பால் மசோதா வரைவுக் குழுவின் கடைசிக் கூட்டத்திலும் உடன்பாடு ஏற்படாதது ஏன்?
உடன்பாடு ஏற்படாததுகூடப் பரவாயில்லை. பிரதமர் பதவியில் இருப்பவரையும் இந்த சட்டத்தின் வரையறைக்குள் கொண்டுவர வேண்டும் என்று சொல்வதே பாவம் என்று சோனியா தலைமையில் நடந்த கூட்டம் முடிவெடுப்பதைத்தான் சகிக்க முடியவில்லை. 'மக்கள் கருத்தைக் கேட்க வேண்டும்தான். அதற்காக எல்லா விஷயங்களையும் கேட்டுவிட முடியாது’ என்று சோனியா முன்னிலையில் போட்டதைப்போன்ற எகத்தாளமான தீர்மானத்தை, எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்திகூடச் சொன்னது இல்லை.
சோனியா இப்படிச் சொல்வதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. அவர் மீதான போஃபர்ஸ் கறை இன்னமும் துடைக்கப்படவில்லை. ஆயுத புரோக்கர் குவாத்ரோச்சியைக் காப்பாற்ற சோனியா எடுத்த முயற்சிகளை, சி.பி.ஐ. நீதிமன்றம்தான் தடுத்துவைத்துள்ளது. எனவே, லோக்பால் மசோதாவை முடிந்த அளவுக்கு சோனியாவே 'ஜோக்பால்’ ஆக்கிவிடுவார்!
எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

ஐ.நா. பொதுச் செயலாளராக பான் கீ மூன் மீண்டும் தொடரும் அளவுக்கு அப்படி என்ன சாதித்தார்?
எதையுமே சாதித்துவிடக் கூடாது என்பதற்காகக்கூட இந்த நீட்டிப்பு தரப்பட்டிருக்கலாம். அவரது பதவிக் காலத்தில்தான் உலகம் இதுவரை பார்த்திராத மனித அவலம் ஈழத்தில் நடந்தது. அதைத் தடுக்க, பான் கீ மூன் தவறினார். கொடுமை நடந்தபோது, அவரால் மௌனமாக மட்டுமே இருக்க முடிந்தது.
ஐ.நா. அலுவலர்களை இலங்கை அரசாங்கம் வெளியேறச் சொன்னது. போர் நடக்கும் இடத்தில் இருந்த ஐ.நா. மற்றும் செஞ்சிலுவை இயக்கத்து ஊழியர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியாது என்றது. ஐ.நா. அமைத்த மூவர் குழுவை இலங்கைக்குள் வரத் தடை செய்தது. இது எதையும் தடுக்கத் தவறியவர் பான் கீ மூன்.
தமிழர்களின் உயிரைக் காப்பது அப்புறம். ஐ.நா. அமைப்பின் மரியாதையையாவது காப்பாற்றியிருக்க வேண்டாமா?
சி.கார்த்திகேயன், சாத்தூர்.
ஆன்மிகம், அரசியல்வாதிகளைக் காப்பாற்றுகிறது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
அந்த முன்னாள் அமைச்சரை மிகவும் மதித்தார் ஜெயலலிதா. பல்வேறு பொறுப்புகளையும் கொடுத்தார். ஆனால், இப்போது அமைச்சர் பதவி மட்டும் அவருக்குக் கிடைக்கவில்லை. அவருக்குக் கிடைக்காமல் இருக்க எந்த நியாயமும் இல்லை. ஆனால் என்ன காரணம் தெரியுமா? அந்த மனிதர், தனக்குப் பதவி கிடைப்பதற்காக ஏதோ யாகம் நடத்தினாராம். அது தோட்டத்துக்குத் தெரிந்துதான், கல்தா கொடுத்தார்களாம். ஆன்மிகம், அரசியல்வாதிகளை எல்லா நேரத்திலும் காப்பாற்றுவது இல்லை!
கே.பார்த்திபன், பரமன்குறிச்சி.
ஊழலை ஒழிக்க காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும்?
ஊழல் செய்யாமல் இருந்தாலே போதும்!
முத்துக்குமாரசாமி, ரிஷிவந்தியம்.
பிரணாப் முகர்ஜியின் அறையில் ரகசிய மைக் பொருத்தப்பட்டு இருந்ததாமே?
இதில் அதிர்ச்சி அடைய எதுவும் இல்லை! அதிகாரத்தில் இருப்பவருக்கு அச்சுறுத்தலானவர் எவரோ, அவரது நடவடிக்கைகளைக் கண்காணிக்கவே செய்வார்கள். ராஜீவ் பிரதமராக இருந்தபோது குடைச்சல் கொடுத்த நிதி அமைச்சர் வி.பி.சிங் அறையிலும், அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜெயில்சிங் அறையிலும்கூட, இதுபோன்ற கருவிகள் பொருத்தப்பட்டதாக, ஓய்வு பெற்ற புலனாய்வு அதிகாரிகள் தங்களது புத்தகங்களில் எழுதி உள்ளார்கள். சோனியா குடும்பத்துக்கு அச்சுறுத்தலாக இருந்ததால், மேனகா அறையில்கூட இவை பொருத்தப்பட்டன.
மன்மோகனது இடத்தில் உட்கார பிரணாப் பல காரியங்களைப் பார்த்துவந்தார். அதனால், இவை பொருத்தப்பட்டு இருக்கும். கவலைப்பட வேண்டியவர் பிரணாப் மட்டும்தான்!
மதுப்பித்தன், சென்னை.
ஜெயலலிதாவுக்குப் பிறகு நடிகைகள் யாருக்காவது நாடாளும் வாய்ப்புஇருக்கிறதா?
இப்போதைக்குச் சொல்ல முடியாது. யாரையாவது உதாரணமாகச் சொல்லி, அவர் உண்மைதான் என்று நினைத்து உள்ளே வந்துவிடப்போகிறார்!
சும்மா இருந்த ஜெயலலிதாவை, முரசொலி மாறன் சீண்டியதால்தான் இந்த ஆபத்தே வந்தது! ஏதோ ஒரு பேட்டியில், 'போகிற போக்கைப் பார்த்தால், ஜெயலலிதா தமிழ்நாட்டு முதல் அமைச்சர் ஆகிவிடுவார் என்று சொல்வீர்கள்போல’ என்று 1966 கால கட்டத்தில் மாறன் சாதாரணமாகச் சொன்னார். அது நடந்தே விட்டது.
நல்லா இருந்த தமிழ்நாடுதான் இது!
ஆனால், இந்தக் காட்சிகள் அனைத்தும் கருணாநிதி - எம்.ஜி.ஆர். பிரிவுக்குப் பிறகுதான், பங்காளி மோதலாக மாறியது. இன்று பகையாளிச் சண்டையாக நிற்கிறது.
அரசியல் என்பது, சேவையாக இருந்தால் அது போட்டியாக மட்டும் முடிந்திருக்கும். சம்பாத்தியமாக மாறியதால், பொறாமையாக வெடித்துவிட்டது!
மா.சுந்தரமூர்த்தி, செய்யாறு.
அதிலும் ஃபோர்ஜரிதான் நிகழும். அப்புறம் எதற்கு அந்தத் தகுதி? வட இந்தியப் பல்கலைக்கழகங்கள் இது போன்ற எத்தனையோ பட்டங்களை வாரி வாரி வழங்கி வருகின்றன. அதை வாங்கிக்கொண்டு, வழக்கறிஞர்களாக, டாக்டர்களாக வலம் வருவார்கள்.
எல்லா விதிகளுக்கும் விதிவிலக்கு உண்டு என்பதுதானே இந்தியாவின் எழுதப்படாத விதி!
இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி
உடன்பாடு ஏற்படாததுகூடப் பரவாயில்லை. பிரதமர் பதவியில் இருப்பவரையும் இந்த சட்டத்தின் வரையறைக்குள் கொண்டுவர வேண்டும் என்று சொல்வதே பாவம் என்று சோனியா தலைமையில் நடந்த கூட்டம் முடிவெடுப்பதைத்தான் சகிக்க முடியவில்லை. 'மக்கள் கருத்தைக் கேட்க வேண்டும்தான். அதற்காக எல்லா விஷயங்களையும் கேட்டுவிட முடியாது’ என்று சோனியா முன்னிலையில் போட்டதைப்போன்ற எகத்தாளமான தீர்மானத்தை, எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்திகூடச் சொன்னது இல்லை.
சோனியா இப்படிச் சொல்வதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. அவர் மீதான போஃபர்ஸ் கறை இன்னமும் துடைக்கப்படவில்லை. ஆயுத புரோக்கர் குவாத்ரோச்சியைக் காப்பாற்ற சோனியா எடுத்த முயற்சிகளை, சி.பி.ஐ. நீதிமன்றம்தான் தடுத்துவைத்துள்ளது. எனவே, லோக்பால் மசோதாவை முடிந்த அளவுக்கு சோனியாவே 'ஜோக்பால்’ ஆக்கிவிடுவார்!
எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.
எதையுமே சாதித்துவிடக் கூடாது என்பதற்காகக்கூட இந்த நீட்டிப்பு தரப்பட்டிருக்கலாம். அவரது பதவிக் காலத்தில்தான் உலகம் இதுவரை பார்த்திராத மனித அவலம் ஈழத்தில் நடந்தது. அதைத் தடுக்க, பான் கீ மூன் தவறினார். கொடுமை நடந்தபோது, அவரால் மௌனமாக மட்டுமே இருக்க முடிந்தது.
ஐ.நா. அலுவலர்களை இலங்கை அரசாங்கம் வெளியேறச் சொன்னது. போர் நடக்கும் இடத்தில் இருந்த ஐ.நா. மற்றும் செஞ்சிலுவை இயக்கத்து ஊழியர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியாது என்றது. ஐ.நா. அமைத்த மூவர் குழுவை இலங்கைக்குள் வரத் தடை செய்தது. இது எதையும் தடுக்கத் தவறியவர் பான் கீ மூன்.
தமிழர்களின் உயிரைக் காப்பது அப்புறம். ஐ.நா. அமைப்பின் மரியாதையையாவது காப்பாற்றியிருக்க வேண்டாமா?
சி.கார்த்திகேயன், சாத்தூர்.
அந்த முன்னாள் அமைச்சரை மிகவும் மதித்தார் ஜெயலலிதா. பல்வேறு பொறுப்புகளையும் கொடுத்தார். ஆனால், இப்போது அமைச்சர் பதவி மட்டும் அவருக்குக் கிடைக்கவில்லை. அவருக்குக் கிடைக்காமல் இருக்க எந்த நியாயமும் இல்லை. ஆனால் என்ன காரணம் தெரியுமா? அந்த மனிதர், தனக்குப் பதவி கிடைப்பதற்காக ஏதோ யாகம் நடத்தினாராம். அது தோட்டத்துக்குத் தெரிந்துதான், கல்தா கொடுத்தார்களாம். ஆன்மிகம், அரசியல்வாதிகளை எல்லா நேரத்திலும் காப்பாற்றுவது இல்லை!
கே.பார்த்திபன், பரமன்குறிச்சி.
ஊழல் செய்யாமல் இருந்தாலே போதும்!
முத்துக்குமாரசாமி, ரிஷிவந்தியம்.
இதில் அதிர்ச்சி அடைய எதுவும் இல்லை! அதிகாரத்தில் இருப்பவருக்கு அச்சுறுத்தலானவர் எவரோ, அவரது நடவடிக்கைகளைக் கண்காணிக்கவே செய்வார்கள். ராஜீவ் பிரதமராக இருந்தபோது குடைச்சல் கொடுத்த நிதி அமைச்சர் வி.பி.சிங் அறையிலும், அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜெயில்சிங் அறையிலும்கூட, இதுபோன்ற கருவிகள் பொருத்தப்பட்டதாக, ஓய்வு பெற்ற புலனாய்வு அதிகாரிகள் தங்களது புத்தகங்களில் எழுதி உள்ளார்கள். சோனியா குடும்பத்துக்கு அச்சுறுத்தலாக இருந்ததால், மேனகா அறையில்கூட இவை பொருத்தப்பட்டன.
மன்மோகனது இடத்தில் உட்கார பிரணாப் பல காரியங்களைப் பார்த்துவந்தார். அதனால், இவை பொருத்தப்பட்டு இருக்கும். கவலைப்பட வேண்டியவர் பிரணாப் மட்டும்தான்!
மதுப்பித்தன், சென்னை.
இப்போதைக்குச் சொல்ல முடியாது. யாரையாவது உதாரணமாகச் சொல்லி, அவர் உண்மைதான் என்று நினைத்து உள்ளே வந்துவிடப்போகிறார்!
சும்மா இருந்த ஜெயலலிதாவை, முரசொலி மாறன் சீண்டியதால்தான் இந்த ஆபத்தே வந்தது! ஏதோ ஒரு பேட்டியில், 'போகிற போக்கைப் பார்த்தால், ஜெயலலிதா தமிழ்நாட்டு முதல் அமைச்சர் ஆகிவிடுவார் என்று சொல்வீர்கள்போல’ என்று 1966 கால கட்டத்தில் மாறன் சாதாரணமாகச் சொன்னார். அது நடந்தே விட்டது.
No comments:
Post a Comment